இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பறக்கை நிழற்தாங்கல் 2017

  நாகர்கோவில் அருகே இருக்கும் சிற்றூரான பறக்கையில் கவிஞர்,எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் படிகம் ரோஸ் ஆன்றோ இணைந்து நடத்தி வரும்  நிழற்தாங்கல்(படைப்பிற்கான வெளி) அமைப்பின் சார்பாக ‘ஜெயமோகனுடன் ஒரு நாள்’ இலக்கிய கலந்துரையாடல்  நிகழப்போகிறது என்ற பதிவைஅவரது தளத்தில் பார்த்தேன். தவறவே விடாமல் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என முன்பதிவு செய்துவிட்டேன். இதற்கு முன்னர்  கன்னியாகுமரிக்கு, திற்பரப்பு அருவிக்கு நாகர்கோவில் வழியே சென்றிருந்தாலும், நாகர்கோவிலுக்குள் இதுவே முதன் முறை. ஜெவின் எழுத்துகள் வழியே கற்பனையில் அங்கு நிறைய அலைந்திருக்கிறேன் எனினும்  கால் பதித்து சுற்றி திரிய போகின்றேன் என்கிற எண்ணமே கிளர்ச்சியை தந்தது. அங்கு எங்கு தங்கபோகிறோம் என எதனை பற்றியும்  யோசிக்காமல், எழுந்த குன்றாத ஆர்வத்த்துடன் முந்தின நாள் காலையிலேயே  கிளம்பி வந்துவிட்டேன். மேற்கில் மலையடிவாரங்களில் சிதறி வியாபிதிருந்த காற்றலைகளை கடந்து ஆரல்வாய்மொழி கணவாய் வழியே உள்ளே நுழைந்தபோது  வேறொரு நிலப்பகுதிக்கு வந்துவிட்டது போல இருந்தது. பசுமையும் வெக்கையும் ஒனறையொன்று ஆக்கிரமிக்க முனைந்து கொண்டிருந்தன. ராம லக