இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ம. நவீனின் பேய்ச்சி வாசிப்பனுபவம்

படம்
மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளைக் குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை.  எட்ட நின்று வழிபட்டுக்கொண்டிருந்த போது, செந்நாயுருவியின் நிறத்தில் சேலை அணிந்திருந்த வறிய கிராமத்து பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் வந்தார். அவர் நெரிசலான கூட்டத்தினிடையில் தன்னை பொருத்திக்கொண்டு, பெருந்தில