இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொன்னியின் செல்வன் பாகம் 1

படம்
  பொன்னியின் செல்வன் தமிழ் வாசகர்களின் கூட்டு நனவிலியில் பெரும் செல்வாக்கு கொண்ட நாவல். அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, ஆதித்த கரிகாலன், பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர் போன்ற வலுவான பாத்திரங்களை கொண்டது. பூங்குழலி, வந்தியத்தேவனின் விடுதலையுணர்வும், நந்தினி, பெரிய பழுவேட்டரையரின் கலகத்தன்மையும், குந்தவை, அருண்மொழி வர்மரின் மதிநுட்பமும், ஊமை ராணியின் மாயத்தன்மையும் என வெவ்வேறு கால கட்ட வாசிப்பில் வேறு வேறு காரணங்களால் மனதிற்கு அணுக்கமாகும் தன்மை கொண்டவைகள். மேடை நாடகம், திரைப்படம் போன்ற பல வடிவங்களில் எடுத்தாளத்தக்க  நாடகீய  தருணங்களால் நிறைந்தது.  பொன்னியின் செல்வன் நாவலைப் பற்றி முதன் முதலாக கேள்விப்பட்டது, எனது நண்பன் காமாட்சி ராஜா மூலம். ஒருவனின் வலது கை மற்றவன் தோளிலும்,  மற்றவனின் இடது கை இவன் தோளிலும் கோர்த்தபடி சாலையில் சாவதானமாக நடக்கும் இணை சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நாங்கள். அவனும் அவன் மூன்று அக்காக்களும் மதுரை பெத்தானியபுரத்திலுள்ள ஒரு வாடகை புத்தக்கடையிலிருந்து எடுத்து பொன்னியி்ன் செல்வனை வாசித்தார்கள். முற்றத்து உரலில் மாவை அரைத்துக்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
ஒரு சினிமா படைப்பின் முதன்மை நோக்கம், பார்வையாளர் திரளை திரையரங்குகளுக்கு வரவழைப்பதுதான். மூன்று மணிநேர திரைக்காட்சியில் மயக்கப்பட்ட அந்த பார்வையாளனை ரசிகனாக மாற்றி மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வரவழைப்பதே அது அடைய முயலும் பாரிய வெற்றி.  இந்த வெற்றி பெறுவதற்காக அதன் படைப்பாக்கத்தில் எல்லா விதமான, சமரசங்களும், விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  சினிமாவின் மீதான எதிர்வினைகள்  அதன் படைப்பாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவற்றில் பரிசீலனைக்கு தகுதியான பெரும்பாலானவைகளில்  தேர்ந்தெடுக்பபட்ட சிலவற்றை அடுத்தடுத்த படைப்புகளில் அதே படைப்பாளி பிரதிபலிப்பது நிகழ்ந்திருக்கிறது.   ஒற்றை கூகுள் சுடுக்கலில்  ஒரு சினிமா படைப்பாளி அவனின் படைப்பைப் பற்றி எல்லாவிதமான எதிர்வினைகளையும் அறிந்து கொள்ளும் வசதி  இந்த சூழலில் இருக்கிறது. விளம்பரப் பதாகைகளை ஏந்தி சினிமாவில் இடம்பெறும் ககனவுகளுடன் இயங்கும் பலர் யூடூப்பிலும், பத்திரிக்கைகளிலும் விமர்சனம் செய்கிறார்கள்.  இவர்களுக்கு சினிமாவை படைப்பாளன் கோணத்தில் அணுகி பார்வையாளனுக்கு விளக்குவதா?  இல்லை பார்வையாளன் கோணத்தில் படைப்பை அணுகுவதா என்கிற பெர

மதுரையும் கேளிக்கை சினிமாவும்

படம்
நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு பேட்டியில்,  மதுரை நகருக்குள்,  80 திரையரங்குகள் இருந்ததாக ஒரு தகவலைச் சொல்கிறார். எட்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நகருக்கு இது ஆச்சரியமான எண்ணிக்கை என முதலில் தோன்றும்.  செயற்கைக்கோள் ஒளியலை வரிசைகளின்  அதீத வளர்ச்சிக்கும், அகன்றும் நீண்டும் கொண்டே இருக்கும் தட்டையான தொலைக்காட்சி தொழில்நுட்பத்திற்கும்,   முன்னரான காலம் அது. அன்று  மதுரையில் உயிர்ப்புடன்  தொடர்ந்து திரையிட்டபடி  இருந்த அரங்குகளின் கணக்குதான், குரு சோமசுந்தரம் கூறியது  வெளியூர்க்காரர்கள் பார்வையில் மதுரை ஒரு கோயில் நகரம். ஆனால் உண்மையில்  மதத்திற்கு நிகராக, கேளிக்கை சினிமா என்னும் ஊடகத்தை  மக்கள் தொடர்ந்து ஆராதித்து வருகிற நகரம் மதுரை.  வேறெந்த பொழுதுபோக்கிற்கும்  இடமில்லாமல், இருந்தாலும் அதற்கு மனமில்லாமல், அரங்குகளில் மட்டுமே மக்கள் அன்று  கேளிக்கை சினிமாக்களை கண்டு  களித்தனர்.  அரங்கிற்கு வெளியேயான வாழ்க்கையில் கூட அந்த கனவுலகின்   அறிதுயிலில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்திற்கு 80 அரங்குகள் என்பது பொருத்தமான எண்ணிக்கை கணக்குதான்.  வைகைக்கு தென் மேற்கு கரைக்கு அருகில் இருந்த திரையரங்குகளான