இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ம நவீனின் வெள்ளை பாப்பாத்தி வாசிப்பனுபவம்

வெள்ளை பாப்பாத்தி சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி,  நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை,  நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து,  அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள்.  என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன். சிறுவர் பள்ளியில் போட்டியாளராகவும், அணுக்க தோழர்களாகவும் ஒன்றாகப்   படிக்கும் சிறுமியான கொடிமலரும், சிறுவனான கணபதியையும்தான் கதையின் முதன்மைப் பாத்திரங்கள். முன்பு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்த்த தன் தந்தை இறந்த பின் 

கரம்சோவ் சகோதரர்கள் ஊட்டி உரை 2018

படம்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் பேராலயத்தின் ராஜ கோபுரங்களில் பக்தி இயக்க காலத்தில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம்தான்  தொன்மையானது. வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் காலத்தால் இளையது. தெற்கு ராஜ கோபுரம் நெருக்கமான நுணுக்க சிற்பங்களால் நிரப்பப்பட்டு மற்ற கோபுரங்களை விட விரிவான கலை நயம் மிக்கது.   ஒவ்வொரு முறையும் மதுரைக்கு செல்லும்போது, தவறவே விடாமல், இந்த தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் நான் ஆலய வழிபாட்டிற்காக நுழைவேன். சிலமுறை ஆலயத்தினுள் சென்று வழிபட எடுத்துக்கொண்ட நேரத்தை விட இந்த தெற்கு கோபுர வாயிலில் நின்று,  தலை உயர்த்தி, சிற்பங்களை பிரமிப்புடன் பார்த்த நேரக்கணக்கு அதிகம். இந்த கோபுரத்தை நிறுவிய ‘சிறுமலை செவ்வந்தி மூர்த்தி செட்டி’ ஒரு கல்வெட்டில் பெயராக அல்லது ஒரு கல்சிற்பமாக வரலாற்றில் தங்கிவிட்டாலும், இவரின் ஆத்மார்த்தமான, தார்மீக முயற்சியின் வெளிப்பாட்டால் நிறுவப்பட்ட  இந்த கோபுரத்தின் பிரம்மாண்டமும், கலைநயமும் காணுந்தோறும் கண்களை நிரப்பி, மனதினைப் பொங்கி விரிய வைக்கின்றன. பெரு்நாவல்களும் ஒரு நோக்கில்  பேராயலயங்கள்தான் எனத் தோன்றுகிறது. அப்படியானால்,  நுணுக்கமாக புனையப்பட்டு, உச்ச நெருக்கட

ஊட்டி இலக்கிய விவாத அமர்வுகள் 2018

படம்
‘Hot boxing’ என்கிற ஆங்கிலச் சொல்லினை , ஒரு சிறிய அறையினுள் சென்றமர்ந்து,  குழுவாக போதைப்பொருட்களை நுகர்ந்து, வேறெந்த நினைவினையும் அனுமதிக்காமல், போதை உணர்வினை மட்டும் அதிமடங்காக விரித்து அனுபவிப்பது  எனத் தோராயமாக வரையறுக்கலாம். ஒரு வசதியான விசாலமான அறையின் மேல்நிலையிலிருந்த, கருப்பு வெள்ளை படங்களின் தத்துவவாதிகள் சிறகுடைய தேவர்கள் போல புடைசூழ்ந்து ஆசியளிக்க, மூன்று நாட்கள் இலக்கியத்திற்காக நிகழ்ந்த ஊட்டி விவாத அமர்வுகளையும் இலக்கிய hot boxing என்பேன்.  முதல் அமர்வு பாவண்ணன் மொழியாக்கம் செய்த  சிறுகதையின் காளிபிரசாத் விமர்சன கலந்துரையாடலுடன் ஆரம்பித்தது. ‘காரணம்’ சிறுகதை கன்னட இளம் எழுத்தாளர் விக்ரம் ஹத்வாராவின் படைப்பு. எழுத்தாளனின் தன்னனுபவ விரிவாக்கமாக இருந்திருக்க சாத்தியமுள்ள இந்தக் கதை,  உள்ளடக்கத்தாலும், இறுதி முடிச்சவிழ்வதிலும், அற உணர்வு வெளிப்பாட்டிலும், வாசிப்புக் கோர்வையை தக்க வைத்ததிலும், குறிப்பிடத்தகுந்த கதையாக இருந்தது. எனினும் விமர்சன நோக்கில் சிறுகதையின் வடிவம் இந்தக் கதைக்கு பொருந்தி வரவில்லை. குறிப்பாக இதன் துவக்கம், மாகெணாவின் புறச்சூழல் விவரிப்பிலிருந்து இல்லாமல்