இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறகிழந்த பறவை

சுனீல் கிருஷ்ணனின் சிறுகதை - பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் என் முந்தைய அம்புப் படுக்கை வாசிப்பனுபவப் பதிவிற்குப் பிறகும், என் சிந்தனை அந்த தொகுப்பிலிருந்து  விலகவில்லை. கூண்டின் கொல்லனும், நாவன்னா லேன்னா செட்டியாரும் ஒரு மெல்லிய நூல் போல விடாமல் இழுக்கிறார்கள். கொல்லன் தன் பேச்சு சாதுர்யத்தால் மொத்த மக்களையும் மயக்கிப் பெற்ற,  எதிர்பார்ப்பை, செல்வாக்கினை, தன் திறனின்மையால் இழந்து விட்டு செய்வதறியாமல் விழிக்கிறான். அவனின் வெளிப்படையான கள்ள மௌனத்தையும் , அவன் சகாக்களின் அரசியல் கோமாளி நடிப்பையும், பேச்சையும் அவதானிக்கும்போது அனைவரையும் கூண்டிலிட்ட கொல்லன் நினைவு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  கணிணி , மின்தகடு, மிண்ணணு பொருட்கள் சைனா தரத்திலிருந்து, சுமாரான தரம், உச்சபட்ச தரம் என குவிந்து கிடக்கும். ஒரு முறை அங்கு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 45 அல்லது 50 வயது நபர் , தவிட்டு நிற சபாரி சூட்டுடன் கண்ணாடிக் கதவினைத் திறந்து,  முகம் முழுவதையும் மறைத்த ஒளி ஊடுருவும் கறுப்ப