இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பையா நாடார் - ஒரு நினைவுக்குறிப்பு

என் அய்யப்பா (அ) தாத்தா கருப்பையா நாடார், விருதுநகர் மாவ‍ட்டம், கல்குறிச்சி செல்லும் சாலையில், மல்லாங்கிணறு  நாடார் மேல்நிலை பள்ளிக்கு பின்னால், சில கிமீ தூரத்தில், பருத்தியும்  வேர்கடலையும் விளையும் கரிசல் மண் ஊரான திம்மன்பட்டியில்,  1929ல் பிறந்தார்.  அவரின் பத்தாம் வயதில் 5ம் வகுப்பு படிக்கும் தருவாயில், அவரது தந்தை  P சுப்பையா நாடார் என்கிற  பதினெட்டாம்படி சுப்பையா நாடார், பங்காளிகள் நால்வர் வீட்டின் கடன் காரணமாக, சொத்துகளை விற்க நேர்ந்ததாலும். கடுமையான பஞ்சத்தினாலும், ஊரை விட்டு வெளியேறினார்கள்.  1940களில் குடும்பத்துடன்  மதுரை சிம்மக்கல் அருகே பழைய ஸ்ரீதேவி தியேட்டர் பின்புறம், பூந்தோட்டம் பகுதியில் ரூ 3 க்கு வாடகைக்கு வந்து குடியேறினார்கள்.  அன்று முதல், அவர் இறக்கும் வரை, காஜா எடுக்கும் வேலை, உணவு விடுதியில் டோக்கன் விற்கும் வேலை, மில் தோழிலாளி,  கடலைப் பொறி கடை,  மிட்டாய் கடை, விறகுக் கடை வியாபாரி, மாணவர்களுக்கு சீட்டு குலுக்கி பரிசு கொடுக்கும் கடை, மாடுகள் வளர்த்து வைகை கரையில் பேச்சியம்மன் படித்துறை அருகில் உள்ள வெங்கடசாமி நாயுடு அக்ரகாரத்தில் பால் விற்பது,  சந்தையில் பழைய