இடுகைகள்

சிறுகதை அனுபவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலைச்செல்வியின் மாயநதி - வாசிப்பனுபவம்

படம்
‘ஐந்திணை’ நிகழ்வி்ற்காக வாசித்த சிறுகதை தொகுப்புகளில் கலைச்செல்வியின் ‘மாயநதி’ ,  அதன் உள்ளடக்கம்,  வேறு வேறு கதைச்சூழல்கள் , கதைக்கருக்கள் போன்ற தன்மைகளால் பிறிதொன்றில்லாத வாசிப்பனுபவம் தந்தது. இந்த தொகுப்பின் கதைகளை,   வேளாண் நிலத்தின் மண்துகள் வாசனையை நாசியில் நிரப்பியபடி,  கால்களை அழுத்தமாக நீர் குழைத்த செம்பழுப்பு  ஈர மண்ணில் ஊன்றச் செய்த,   கதைகள்  ஒரு வகையாகவும்,  எண்ணவோட்ட சித்தரிப்பு மட்டும் முதன்மையாக அமைந்த  பிற வகைகளாகவும்  பிரிக்கலாம். இந்த வகைமைகளுக்கு வெளியே மருங்கையம்மன் போன்ற இருள்மிகுபுனைவும்(dystopian), வியாழக்கிழமை, பெரியாயி போன்ற யதார்த்தவாத  முயற்சிகள் எனவும் ஒரே அமர்வில் வாசிக்க முடிந்த சிறுகதைத் தொகுப்பு இந்த ‘மாயநதி’.   வாசிப்பின்போது  கதைக்களன்களும், பாத்திரங்களும் ஏற்கனவே வாசகன்  அறிந்தவைகளாகத் தோன்றினாலும், இந்தக் கதைகள்  தனித்துவமான நோக்கம், பார்வை, மொழிபுடன் புனையப்பட்டுள்ளன.   வறட்சியால் நீர்நிலைகள் அழிவது,  வேளாண் நிலங்கள் கைவிடப்படுவது,...

கதீட்ரலின் காமதேவன்

ஜெயமோகனின் சிறுகதையான ‘மன்மதன்’ நான் வாசித்து தீராத கதைகளில்  ஒன்றாகவே நீண்ட நாட்கள் என்னுள் இருந்து வந்தது. மற்றொரு தருணத்தில், ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை  முதன் முதலாக வாசித்த போது . அதனுடன் ஒப்பிட்டு ‘மன்மதன்’ கதையின் வாசிப்பினை விரிவாக்கலாம், என்ற எண்ணம் எழுந்தது. இந்த இரு கதைகளையும் ஒப்பிட்டு வாசித்து அறியுந்தோறும்   இந்த இரு சிறுகதைகளின் மீதான பிரமிப்பு மேலும் அதிமடங்கானது. புனைக்கதை எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இடையே நிகழும் உணர்வு பரிமாற்றத்திற்கு பொருத்தமான சான்றாக பலமுறை ஜெயமோகன் அவர்களின் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட கதை கதீட்ரல். கதீட்ரல் கதையின் முதன்மைப் பாத்திரமான ராபர்ட்  விழியிழந்தவர். கருப்பின அல்லது கலப்பின(coloured) பெண்ணாக  வாய்ப்பிருக்கும் தன் மனைவி இறந்தபின் வாழும் தனியர். பத்தாண்டுகளுக்கு முன்பு அவரின் வாசிப்பிற்கும் தனிவாழ்விற்கும் உதவியாளராக  உடனிருந்த முன்னாள் பணிப்பெண்ணும் மற்றும் இந்நாள் தோழியுமான பெண்ணைக் காண வருகிறார். இரு முறை தன் முகம் மீது ராபர்ட்டின் கை விரல்கள் படர்ந்துணர அனுமதித்தவர் இந்த தோழி.  ...

ம நவீனின் வெள்ளை பாப்பாத்தி வாசிப்பனுபவம்

வெள்ளை பாப்பாத்தி சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி,  நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை,  நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து,  அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள்.  என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன். சிறுவர் பள்ளியில் போட்டியாளராகவும், அணுக்க தோழர்களாகவும் ஒன்றாகப்   படிக்கும் சிறுமியான கொடிமலரும், சிறுவனான கணபதியையும்தான் கதையின் முதன்மைப் பாத்திரங்கள். முன்பு ரப்பர் தோட்டத்தில் வேலை...

சிறகிழந்த பறவை

சுனீல் கிருஷ்ணனின் சிறுகதை - பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் என் முந்தைய அம்புப் படுக்கை வாசிப்பனுபவப் பதிவிற்குப் பிறகும், என் சிந்தனை அந்த தொகுப்பிலிருந்து  விலகவில்லை. கூண்டின் கொல்லனும், நாவன்னா லேன்னா செட்டியாரும் ஒரு மெல்லிய நூல் போல விடாமல் இழுக்கிறார்கள். கொல்லன் தன் பேச்சு சாதுர்யத்தால் மொத்த மக்களையும் மயக்கிப் பெற்ற,  எதிர்பார்ப்பை, செல்வாக்கினை, தன் திறனின்மையால் இழந்து விட்டு செய்வதறியாமல் விழிக்கிறான். அவனின் வெளிப்படையான கள்ள மௌனத்தையும் , அவன் சகாக்களின் அரசியல் கோமாளி நடிப்பையும், பேச்சையும் அவதானிக்கும்போது அனைவரையும் கூண்டிலிட்ட கொல்லன் நினைவு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  கணிணி , மின்தகடு, மிண்ணணு பொருட்கள் சைனா தரத்திலிருந்து, சுமாரான தரம், உச்சபட்ச தரம் என குவிந்து கிடக்கும். ஒரு முறை அங்கு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 45 அல்லது 50 வயது நபர் , தவிட்டு நிற சபாரி சூட்டுடன் கண்ணாடிக் கதவினைத் திறந்து,  முகம் முழுவதையும் மறைத்த ஒ...

ம நவீனின் - பேச்சி - வாசிப்பனுபவம்

படம்
ம நவீனின்  - பேச்சி பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்ட தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது. கணிணியில் தமிழ் எழுத்துருக்களை, டைப் பதிக்கும் இந்த தலைமுறை  இளைஞனுக்கு, தன் இறப்பின் விளிம்பில் இருக்கும் சென்ற தலைமுறை அப்பா, முன்பொரு முறை நிகழ்ந்த தன் வாழ்வின் உச்சநுனித் தருணத்தைப் பகிர்கிறார். இவர்கள் உரையாடல் வழியாக கதை விரிகிறது.   வெள்ளைக்கார துரையிடம் வேலையாளாக இருந்த தன் தாத்தா, அவரளித்த துப்பாக்கியை சிரத்தையுடன் பேணியவர். வேட்டை நாய்களின் துணை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் தலைகளை மண்ணில் புதைத்து பற்களை சேகரித்தவர். இறந்த வேட்டைநாயின், ‘ரத்த சதையின் மீது கறுப்பு கம்பளி போர்த்தியது போல இருந்தது’ ‘ஒரு தேர்ந்த வீரனின் வாளைப்போல இடவலமாக சுழன்ற வாள்’, என சில நொடிக்குமுன் விபத்தில் இறந்த விலங்கின் உடலின் சதை...

ம நவீனின் ‘போயாக்’, 'யாக்கை' சிறுகதைகள் வாசிப்பனுபவம்

போயாக் சிறுகதை ம நவீனின் ‘போயாக்’ கதை, முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள்,  பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப்  போல  விவரிக்கப்பட்டிருந்தது.  தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை  நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர்  என்ற மூன்று வழிகளில்  ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி.   அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.   கதைசொல்லியின் வருகை மற்றும் அந்த சூழலின் தங்கி இருத்தலால், , ஈபான் ஆதிகுடியினருக்கு  ஆங்கிலக் கல்வியும், குற்றேவல் புரிந்தால் கிடைக்கும் கூலியும் பலனாகக் கிடைக்கிறது.  சீமாவிற்கோ அவள் பழகுவத...

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்

படம்
முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும்,  மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது.  மரணக் குறிகளை  முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம்,  இடைநில்லா  துயரப் புனலில் விழுந்த சருகிலை  போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக்  கொண்டு  சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு  மட்டும் காட்டிவிட்டு உதறிச்  செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன.  வாசக கவனத்தை அழுத்தமாக கோரிய, வாசித்த அந்த கணம் வரை நான் அறிந்திடாத  தகவல்களான  ஆயுர்வேதத்தின் வஸ்தி, பிழிச்சல், மூக்கு வழி தங்க பஸ்பம், சுதர்சன குளிகை,  இறப்பிற்கு முன்னதான காட்டுப்பீ,  குண்டலினி குறியீடான பாம்பு தன் வாலைக் கடித்து சுழித்தல்,  மரணக் குறிகளான, சக்கர வட்டம், கடலாமை, தாமரை சிற்றலைகள், தண்டுவட  டி.பி, ...

நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்

படம்
சுரேஷ் பிரதீப்பின் ‘நாயகிகள்  நாயகர்கள்’ சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம்,  பெரும்பாலான கதைகள்  சிறுவர்களின் கோணங்களில் இயல்பாக அமைந்திருக்கும் தன்மை.   பெரியம்மா வீடுகளிலும், குற்றுளத்திலும்,  பார்கவி சரவணன் உறவின் நடுவிலும்,  பெண்களிடம் தோற்கவே பிறந்த இந்த ஆண்மகன்கள்,   கூடத்தின் நடுவில் வைத்த பிரதிபலிக்கும் ஆடி  போல,  தங்களை விட பெரியதாக நிகழும்  நிகழ்வுகள் முன்னின்று அவதானித்து, அவற்றை புரிந்து கொள்ள முயல்கிறார்கள் .  முடிவில் அதன் விளைவுகளோ,   முதலெழுத்து கூட எழுதப்படாத சிலேட்டில், முட்கள் கொண்டு கீறி எழுதிய கோரமான வடிவங்கள் போல அழியாமல் அவர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து விடுகின்றன. இந்த தொகுப்பில்,  நான் மீண்டும்  மீண்டும் வாசித்த சிறந்த  கதை, ,  குறியீடுகளால் நிரம்பி பொருத்தமாக அமைந்திருந்த ‘சில்ற’ . கல்லூரி நண்பன் ரஞ்சித்தால்,  விடுதியில் வ‍ழங்கப்பட்ட்  ஸ்கிப்பிங்  கயிறு, மீது  மோகம் கொண்டு  அதன் மீது விருப்ப விலக்க உறவு  வைத்திருக்க...

விஷால் ராஜா - சிறுகதை தொகுப்பு - எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்

படம்
ஒரு இளம் எழுத்தாளனின் முதல் சிறுகதை தொகுதியினை அது இட்டு சென்ற வரிசையிலேயே வாசித்ததும், வாசிப்பனுவத்தை உடனடியாக எழுத தோன்றி எழுதியதும் இதுதான் முதல் முறை. என் வாசிப்பில், விஷால் ராஜாவின் இந்த தொகுப்பின் சிறந்த கதை ‘குளிர்’. கதைக்களமாக ஒரு ஒரு ரயில் நிலையம். அங்கு காத்திருக்கும் கதைசொல்லிக்கு காலை சூழலின் குளிர்மை உடலையும் மனதையும் ஊடுருவி உறுத்துகிறது. பெண்கள் இருவர், அங்கு வந்தமர்ந்து,   ஒருவருடன் ஒருவர்  நட்புடன்  பேசிக் கொண்டு  சாமந்தி பூக்களை கோர்க்கின்றனர். அதன் பின் ஒரு காவலாளி வந்து  சிமிட்டி இருக்கையில் மிடுக்குடன் அமர்கிறார்.  கவனிப்பினை கோரும் , நடையுடன்,   வலது முன்கை கோணலாக தொடுத்திக் கொண்டு ரப்பர் போன்று ஆடிக்கொண்டு வரும் மாற்றுத் திறனாளி ஒருவர் காவலாளிக்கு நாடகத் தன்மையுடன் வணக்கமிட்டு , அவரிடம் பணம் பெற்று எதிர் டீக்கடைக்கு சென்று டீ குடிக்கிறார். கதைசொல்லியிடம் பேச்சு கொடுக்கும் காவலாளி, அவன் முன்னாள் சைக்கிள் திருடன் எனவும், அவன் கைகளை உடைத்து ஊனமாக்கியது தான்தான் எனவும்  சொல்ல கேட்டு மனம் குத்தியது போல உணர்கிறான் க...