இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாளரக் கண்கள்

படம்
                                      அந்த பெரிய சாளரத்தின் முன்,  தன்னிலை மறந்து, தான் காணும் காட்சிகளில் லயித்து,  நேரம் போதாமல், நின்றிருப்பது, அவன் வழக்கம். குறு மென்பொருள் அலுவலகங்கள், இளநீர் அடுக்கு போல அடுத்தடுத்து நிரம்பியிருக்கும் கண்ணாடி மாளிகையின், ஒன்பதாவது மாடியின், கடைசி தளத்தில் உள்ளது அவன் பணி புரியும் இடம்.  அந்த அலுவலக உணவக அறையின் ஒரு பக்க சுவருக்கு பதிலீடாக, பத்தடி உயரத்திற்கு, அறுபதடி அகலத்தில், அவன் தன் வாழ்நாளில் கண்டதிலேயே மிகப்பெரிய அந்த கண்ணாடி சாளரம் அமைந்திருக்கிறது. வலது மோதிர விரலினை கோப்பையின் கைப்பிடியில் விட்டு,   ஆட்காடி விரல், கட்டை விரல்களால், அணைத்தபடி , மிதமான சூட்டில் பருகப்படும் காபிக்கு, காண்பவைகளை, நுண்படுத்தி காட்டும் திறன் இருக்கிறது என அவன் கண்டுகொண்டது அதன் முன்தான். புத்தக வரிசையிலிருக்கும், ஒவ்வொரு புத்தகமாக எடுத்து, அதன் விளிம்பினை மார்பில் ஏந்தி, உள்ளங்கைகளில் வைத்து,  ஏதேனும் ஒரு பக்கத்தை திறந்து எடுத்து, பொறுமையாக வாசிக்கும் வாசகன் போல அவன் அந்த சாளர காட்சிகளை, நாள் தவறாது, தொடர்ந்து கண்டு வருகிறான். ஒரு சிறிய வீதி,