இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–வண்ணதாசன் உரை

படம்
எழுத்தாளர் சு வேணுகோபால் உரையாடலின் நடுவே, பார்வையாளர்களின் வாழ்த்துக்களுடனும், வணக்கங்களுடனும், மேடையில் வந்து அமர்ந்தார் எழுத்தாளர், கவிஞர் வண்ணதாசன் அவர்கள். மிக மெல்லிய, ஆனால் தீர்க்கமான குரலில் அவரது உரையை துவங்கினார். அவரின் கதைகள் வாசகனிடமிருந்து பெற்றவற்றை வாசகனுக்கே திரும்ப அவர் எழுதும் நீண்ட கடிதம் என்றார்.  ஆற்றின் கரையிலிருந்து ஆற்றின் நடுவில் ஓடும் வெள்ளத்தை பார்ப்பதுபோல, கடலின் கரையிலிருந்து ஓயாத கடலை பார்ப்பது போல, சுடலைமாடன் கோயில் வாசலில் இருந்து தெருவில்  இருக்கும் சலிக்காத மனிதர்களை பார்ப்பது போல, வாழ்வின் ஓரத்தில் இருந்து தீராத மையத்தை பாரப்பது தனக்கு பிடித்திருக்கிறது என்றார். ஓரு பெரிய விவசாய குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் பிறந்திருக்கின்றார். அவரது சொற்களை, வாசகங்களை,  வாசகன் வந்து அவருக்கு ஞாபகப்படுத்தும் நிலையிலுருக்கும் எழுத்தாளனாகவே இருக்க விரும்புவதாக கூறினார்..  பதட்டத்திற்கு முந்திய அமைதியாக, அந்த அமைதியை கலைக்கும் உங்களிடம் பெற்ற சொற்களாக இருந்து,  உங்களுக்கே திரும்ப அளிப்பவை எனது கதைகள் என்றார்.  குமிழியிலே உதிர்ந்த சிறுகுகள், இலைகள் மேலும், கீழு

விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–சு வேணுகோபால் உரை

படம்
இரண்டாவது நாள் காலை 6 மணிக்கு எழுந்தேன். எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடனான காலை நடையை தவற விட்டு விட்டோம் என என்னை நானே கடிந்து கொண்டே அவசரமாக குளித்து புறப்பட்டேன்.  அறையில் உடனிருந்த  கமலகண்ணன், சுசீல், விஜயகுமார் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த வேறு ஒரு குழுவாக நடை சென்றோம். வழியில் ஏற்கனவே நடந்து சென்ற ஜெமோ, கடலூர் சீனு, அரங்கசாமி, விஜயராகவன் அணியுடன் சேர்ந்து கொண்டோம். தேநீர் கடையில் விவாதம் பன்னாட்டு உளவு பற்றி சென்றது. ரஷ்ய உளவுதுறையான KGP ல் ஊடுறுவிய அமெரிக்க உளவாளி பற்றி ஜெமோ பேசினார். அந்த உளவாளி பெட்டி பெட்டியான ஆவணங்களுடன் பிரிட்டன் தூதரகத்தில் சரண்டைய சென்ற நிகழ்வின் சித்திரம் Fall of the Titan என்ற புத்தகத்தில் பதிவாகியிருப்பதையும் பற்றி உரையாடல் நிகழ்நத்து. காலை உணவு பரிமாற உதவியபின் அவசரமாக உண்டு முடித்து,  ஏற்கனவே தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வு நடந்த அரங்கத்திற்கு சென்றோம். முதல் அமர்வில் எழுத்தாளர் சு.வேணுகோபால் கலந்துரையாடலை நடத்தினார். எழுத்தாளன் வாழ்வனுபவத்தையும் அவனது படைப்பின் பரப்பில் அந்த அனுபவத்தின் பங்கினை பற்றியும் விவாதம் நிகழ்ந்தது. இவையி

விஷ்ணுபுரம் விருது 2016 முதல் நாள்

படம்
        முதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முன்னமர்ந்து நடத்தினார். மரபில் இருந்து வளமையான சொற்கள் அற்று போய்விடாமல், அடுத்த தலைமுறை வாசகனுக்கு எடுத்து அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் உற்சாகத்துடன் நிகழ்ந்தது.  கவிதை ஞானத்திற்கு மிக அருகில் இருக்கிறது எனவும், மொழியில் பலவேறு புதிய சொற்கள் வந்து  குவிய வேண்டியது அவசியம் எனவும் கூறினார். உதாரணமாக கம்பராமாயணத்தில், யானை என்ற பொருள்படும்  களிறு, குஞ்சரம், வாரணம் போன்ற பல சொற்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த வெவ்வேறு சொற்கள் அவற்றின் ஓசைநயத்திற்கு ஏற்ற வகையில் செய்யுளில் அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என சுட்டி காட்டினார் நாஞ்சில். ஆய்வாளன், விமர்சகன், அகராதி, கலைசொல் உருக்குபவன் இவர்களை விட எழுத்தாளனுக்குதான் இந்த பணியின் பெரிய பொறுப்பு என விவாதிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து, கன்னியகுமாரி மாவட்டத்திலேயே மூன்று தனி தனி வட்டார வழக்கு இருப்பதையும், அந்தந்த வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் அவசியத்தை பற்றி விவாதம் நிகழ்ந்த்து. இந்த வட்டார சொற்கள் வாசகன் வாசிப்பிற்கு தடையாக இருப்பதால், இலக்கியத்தில்