இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் ஆல்வாரிஸ் - மொழியாக்கம் சுசீல்குமார்

படம்
நமது சூழலில், ஓரளவு லட்சியத்துடன் இருப்பதாக கருதப்படும், ஒரு பதின்ம வயது இளைஞன் ஒருவன் என்ன செய்வான்? ஒரு சாரார், நல்ல ஊதியம் பெற்று செட்டிலாக வாய்ப்புள்ள தொழில்த் துறையினை தேர்ந்தெடுத்து, அதற்காக பயற்சி வகுப்புகளில் முன்னரே சேரும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அடுத்த சாரார், மேன்மையான துறைகளாக கருதப்படும் திரைத்துறை, கிரிக்கெட் போன்ற புகழ் அதிகம் கிடைக்கும் துறைக்கான கனவில் இருப்பார்கள். அந்த வாசலை நோக்கிய பயணத்தில் ஏதேனும் ஒரு அடி எடுத்திருப்பார்கள். பதினாறு வயதில் எனக்கு, எந்த ஒரு தெளிவான லட்சியமோ கனவோ இருந்ததாக நினைவில்லை. பத்தாவது பொதுத்தேர்வுக்குப் பிறகான அந்த வருடம், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஒரே ஒரு இளைப்பாறும் வருடம் எனத் தோன்றியிருக்கிறது. புதிதாக வீட்டில் வாங்கிய வண்ணத் தொலைக்காட்சியில், கிரிக்கெட்டில் வீசி அடிக்கப்பட்ட அத்தனை பந்துகளையும் முழு நேரமாக பார்த்து பொழுதை கழித்துக் கடந்தேன். கேப்டன் பொறுப்பினைத் துறந்து புத்துணர்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் அடி அடி என்று அடித்த அந்த 1998 வருடம். அதன் பயன்மதிப்பானது, இந்தப் பத்தியில் பதிவதைத் தாண்டி எதுவுமில