இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ம நவீனின் ‘போயாக்’, 'யாக்கை' சிறுகதைகள் வாசிப்பனுபவம்

போயாக் சிறுகதை ம நவீனின் ‘போயாக்’ கதை, முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள்,  பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப்  போல  விவரிக்கப்பட்டிருந்தது.  தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை  நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர்  என்ற மூன்று வழிகளில்  ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி.   அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.   கதைசொல்லியின் வருகை மற்றும் அந்த சூழலின் தங்கி இருத்தலால், , ஈபான் ஆதிகுடியினருக்கு  ஆங்கிலக் கல்வியும், குற்றேவல் புரிந்தால் கிடைக்கும் கூலியும் பலனாகக் கிடைக்கிறது.  சீமாவிற்கோ அவள் பழகுவதற்கு அரிதான அயலானின் அணுக்க உறவும், வாய்ப்பமைந்தால் உடலின்ப

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்

படம்
முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும்,  மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது.  மரணக் குறிகளை  முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம்,  இடைநில்லா  துயரப் புனலில் விழுந்த சருகிலை  போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக்  கொண்டு  சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு  மட்டும் காட்டிவிட்டு உதறிச்  செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன.  வாசக கவனத்தை அழுத்தமாக கோரிய, வாசித்த அந்த கணம் வரை நான் அறிந்திடாத  தகவல்களான  ஆயுர்வேதத்தின் வஸ்தி, பிழிச்சல், மூக்கு வழி தங்க பஸ்பம், சுதர்சன குளிகை,  இறப்பிற்கு முன்னதான காட்டுப்பீ,  குண்டலினி குறியீடான பாம்பு தன் வாலைக் கடித்து சுழித்தல்,  மரணக் குறிகளான, சக்கர வட்டம், கடலாமை, தாமரை சிற்றலைகள், தண்டுவட  டி.பி,  ஏரழிஞ்சில் மரம், முனிவர் பதஞ்சலி சிலைக்கு எதிராக செதுக்கப்பட்ட தலைக்கோலி  சிலை என ஆங்காங