நெல்சன் மண்டேலாவும் ஏழு சட்டைகளும்
அரசியல் தலைவர்கள், பெருந்திரளான மக்களை கிளர்ச்சியடையச் செய்து கவர்ந்திழுப்பதில் தேர்ந்த பேரழகிகள் (mass seductress) என்கிறார், ஜான் கார்லின் (Invictus - John Corlin). இந்த வரி, மறைந்த என் தாய்வழி ஆச்சி குருவத்தாய், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில், கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, அவரின் வயதுடைய, எம்.ஜி.ராமசந்திரனின் கடிகாரம் அணிந்த கைகளை மட்டும் நேரில் பார்த்ததை பிரமிப்புடன் விவரித்த ஒவ்வொரு சொற்களையும் மீண்டும் நினைவூட்டியது. அணியும் உடை வழியாக மக்கள் கூட்டத்திற்கு அழுத்தமான பாதிப்பை செலுத்தாத அரசியல் தலைவர்கள் மிகக் குறைவு. வரலாற்றின் பக்கங்களில் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கும், இந்த அதிமானுடர்களை முதன் முதலில் கண்டதை விவரிக்கும் நினைவுக் குறிப்புகளில், அவர்களை வியப்பில் ஆழ்த்திய உடை விவரிப்பு கண்டிப்பாக இருக்கும். சார்லி சாப்லின், காந்தியை முதன் முதலில் சந்திக்கும்போது, கொடும் குளிர் நாட்டின் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத, இந்திய பாரம்பரிய கதர் துணியை ஒழுங்கற்று ...