விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–வண்ணதாசன் உரை
எழுத்தாளர் சு வேணுகோபால் உரையாடலின் நடுவே, பார்வையாளர்களின் வாழ்த்துக்களுடனும், வணக்கங்களுடனும், மேடையில் வந்து அமர்ந்தார் எழுத்தாளர், கவிஞர் வண்ணதாசன் அவர்கள். மிக மெல்லிய, ஆனால் தீர்க்கமான குரலில் அவரது உரையை துவங்கினார். அவரின் கதைகள் வாசகனிடமிருந்து பெற்றவற்றை வாசகனுக்கே திரும்ப அவர் எழுதும் நீண்ட கடிதம் என்றார். ஆற்றின் கரையிலிருந்து ஆற்றின் நடுவில் ஓடும் வெள்ளத்தை பார்ப்பதுபோல, கடலின் கரையிலிருந்து ஓயாத கடலை பார்ப்பது போல, சுடலைமாடன் கோயில் வாசலில் இருந்து தெருவில் இருக்கும் சலிக்காத மனிதர்களை பார்ப்பது போல, வாழ்வின் ஓரத்தில் இருந்து தீராத மையத்தை பாரப்பது தனக்கு பிடித்திருக்கிறது என்றார். ஓரு பெரிய விவசாய குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் பிறந்திருக்கின்றார். அவரது சொற்களை, வாசகங்களை, வாசகன் வந்து அவருக்கு ஞாபகப்படுத்தும் நிலையிலுருக்கும் எழுத்தாளனாகவே இருக்க விரும்புவதாக கூறினார்.. பதட்டத்திற்கு முந்திய அமைதியாக, அந்த அமைதியை கலைக்கும் உங்களிடம் பெற்ற சொற்களாக இருந்து, உங்களுக்கே திரும்ப அளிப்பவை எனது கதைகள் என்றார். குமிழியிலே உதிர்ந்த ச...