எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்
ஒரு சினிமா படைப்பின் முதன்மை நோக்கம், பார்வையாளர் திரளை திரையரங்குகளுக்கு வரவழைப்பதுதான். மூன்று மணிநேர திரைக்காட்சியில் மயக்கப்பட்ட அந்த பார்வையாளனை ரசிகனாக மாற்றி மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வரவழைப்பதே அது அடைய முயலும் பாரிய வெற்றி. இந்த வெற்றி பெறுவதற்காக அதன் படைப்பாக்கத்தில் எல்லா விதமான, சமரசங்களும், விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சினிமாவின் மீதான எதிர்வினைகள் அதன் படைப்பாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவற்றில் பரிசீலனைக்கு தகுதியான பெரும்பாலானவைகளில் தேர்ந்தெடுக்பபட்ட சிலவற்றை அடுத்தடுத்த படைப்புகளில் அதே படைப்பாளி பிரதிபலிப்பது நிகழ்ந்திருக்கிறது. ஒற்றை கூகுள் சுடுக்கலில் ஒரு சினிமா படைப்பாளி அவனின் படைப்பைப் பற்றி எல்லாவிதமான எதிர்வினைகளையும் அறிந்து கொள்ளும் வசதி இந்த சூழலில் இருக்கிறது. விளம்பரப் பதாகைகளை ஏந்தி சினிமாவில் இடம்பெறும் ககனவுகளுடன் இயங்கும் பலர் யூடூப்பிலும், பத்திரிக்கைகளிலும் விமர்சனம் செய்கிறார்கள். இவர்களுக்கு சினிமாவை படைப்பாளன் கோணத்தில் அணுகி பார்வையாளனுக்கு விளக்குவதா? இல்லை ...