இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பார்ப்பனியம்

பார்ப்பனியம் என்கிற சொல்லை பள்ளி சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் வழியாக முதன் முறையாக அறிந்தேன். படமெடுத்து சீறும் பாம்பின் கோட்டோவியத்துடன் ‘பார்ப்பனியப் பாம்பு’ என எழுதப்பட்ட வெறுப்பு வாசகம் அது. அந்நிய நாட்டு சதியின் விளைவாக உலகத்தினை அழிக்க உருவாக்கப்பட்ட  பரவிக் கொல்லும் விஷச் செடியின் விதையாக இருக்கும் என நினைத்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பின்தான் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்களின் அதிகாரத்தினை சுட்டும் பதிலிச் சொல் என அறிந்து கொண்டேன்.  பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிக்கும், மதுரை லேபர் உயர்நிலைப் பள்ளியின் வெளிப்புற சுவரில் அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.  மதுரா கோட்ஸ் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக கட்டப்பட்ட பள்ளி அது. மதுரை ரயில் நிலையத்திற்கு கிழக்குபுற தண்டவாளத்திற்கு அருகில் உள்ளது அந்தப் பள்ளி. தண்டவாளத்திற்க்கு நேர் மேற்கே மறுபுறம், பெரும்பாலும் பார்ப்பனர்களும்,  பிற உயர் வகுப்பினை சேர்ந்தவர்களும் படிக்கும் விகாசா பள்ளி. இரண்டு பள்ளிகளுக்கும் மதுரை வட்டார கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகளில், பேச்சு, விளையாட்டுப் புதிர் போட்டிகளில் பங்கு பெற வேறு வேறு சூழலில்