பொன்னியின் செல்வன் பாகம் 1
பொன்னியின் செல்வன் தமிழ் வாசகர்களின் கூட்டு நனவிலியில் பெரும் செல்வாக்கு கொண்ட நாவல். அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, ஆதித்த கரிகாலன், பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர் போன்ற வலுவான பாத்திரங்களை கொண்டது. பூங்குழலி, வந்தியத்தேவனின் விடுதலையுணர்வும், நந்தினி, பெரிய பழுவேட்டரையரின் கலகத்தன்மையும், குந்தவை, அருண்மொழி வர்மரின் மதிநுட்பமும், ஊமை ராணியின் மாயத்தன்மையும் என வெவ்வேறு கால கட்ட வாசிப்பில் வேறு வேறு காரணங்களால் மனதிற்கு அணுக்கமாகும் தன்மை கொண்டவைகள். மேடை நாடகம், திரைப்படம் போன்ற பல வடிவங்களில் எடுத்தாளத்தக்க நாடகீய தருணங்களால் நிறைந்தது. பொன்னியின் செல்வன் நாவலைப் பற்றி முதன் முதலாக கேள்விப்பட்டது, எனது நண்பன் காமாட்சி ராஜா மூலம். ஒருவனின் வலது கை மற்றவன் தோளிலும், மற்றவனின் இடது கை இவன் தோளிலும் கோர்த்தபடி சாலையில் சாவதானமாக நடக்கும் இணை சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நாங்கள். அவனும் அவன் மூன்று அக்காக்களும் மதுரை பெத்தானியபுரத்திலுள்ள ஒரு வாடகை புத்தக்கடையிலிருந்து எடுத்து பொன்னியி்ன் செல்வனை வாசித்தார்கள். முற்றத்து உரலில் மாவை அரைத்துக்